Wednesday, March 17, 2010


என் காதல்(s) (தொடர்ச்சி).......

என்னை ஏமாற்றிய அவளின் காதல் :(2007-2009) ---- (1)


காதல் அழகு தான் என்ற என் நினைப்பு , இவள் என்னை பிரிந்து செல்லும் பொழுது பிரிந்தது..
கல்லூரி முடித்தேன் , புதிய பெண்ணோடு தொடர்ந்த என் காதலால் , அவள் செய்யும் Call Centre பணியிளையும் சேர
என்னை அழைத்தது மௌனமாக . என்னை காதலித்த பெண் தேவதை என்றால் , நான் காதலித்த இவள், அழகிய
இளவரசி . எனக்காக இவள் தான் பிறந்தால் என்ற என் எண்ணம் அவளுக்கும் இருப்பதை , இரவு நாங்கள் செய்யும் sms சாட்சி சொல்லும் ,
சில காலம் கழித்து நான் பணி மாற , அவள் எனக்காக அதே வேலையை தொடர்ந்தால் , நான் கொண்ட காதலையும் தொடர்ந்தால் வீட்டுக்கு
தெரியாமல் ...... சொர்க்கம் என்ன வென்று யார் கேட்டாலும் ,நான் அன்று கூருரிபேன் அவள் இருக்கைக்கு அருகே . வாழ்கையில் எந்த சோகம் , வலி வந்தாலும்
தெரியாது அவள் அருகே இருக்கும் பொழுது. பல நாள் கழித்து நல்ல பணி மாறினாள் அவள் , என் பழக்கத்தையும் மாற்றுவாள் என்ற் என் சிறிய சந்தேகம் சற்று
உண்மையானது தொடக்கத்திலேயே . Hi da என்ற sms hi என்று மாறியது . வழக்கமான பெண்கள் (சிலர் ) பாணியில் அவளும் தொடர்ந்தால் ஒரு சிறிய காதலை அவள்
இருக்கைக்கு பக்கத்தில் உள்ளவரை . உண்மையாக நேசித்த என்னால் , அவள் உணர்வுகள் ஒவ்வொன்றும் , தெளிவாக தெரிந்தது . cab செல்லும் 30 நிமிடம் எனனிடும் மட்டுமே பேசியவள் ,
10 நிமிடம் மட்டும் பேச செய்தால். எனினும் அவள் call -waiting சென்றன அதே 30 நிமிடும் .............


தொடர்ச்சி ..

ஆணுக்கே உரிய அதே கோபத்தோடு, ஆனால் மனதில் காதலோடு அவளை வார்த்தைகளால் சாடினேன்.. பொறுத்து பார்க்கலாம் என்று நினைக்கும்போதெல்லாம் அவள் "call waiting tune" என்னை கோபத்தின் உச்சிக்கு tune செய்ய , சில வார்த்தைகள் பச்சைகளாகவும் அவளை சென்றது, என் காதல் புரிய அவள் இன்று அவளாக இல்லை என்று உணராமல். என்னை சந்திப்பதையும் நிறுத்தினால் அவளுக்கு சாதகமாக!!!!
ஓரிரு சிகரெட்டை சந்தோசமாக புகைக்கும் நான், அன்று முதல் பிடித்தேன் ஓரிரு பாக்கெட்களாக .
நான் என்ன பேசினாலும் முன்பு பொருத்து கொள்ளும் அவள் இப்போது "பொறுக்கி" என்றால் அவன் மீது கொண்ட நெருக்கத்தோடு. ஒரு வாரம் நான் காட்டிய கோபம் , தினமும் 2 forward msg ஆகா மட்டும் அவளை சென்றது . அதை அவள் படிக்க வில்லை என்பதை என் மனம் அன்று ஏற்கவில்லை .
என் பிறந்த நாள் அன்று தான் அவளுக்கு அவன் மீது அந்த அன்பு பிறந்திருக்கிறது என்று உணராமல் என் காதலை அக்கறையோடு அழகாய் வளர்த்திருந்தது அன்று தான் புரிந்தது
2 வாரம் கழித்து call செய்தேன், எடுக்க வில்லை .. 10 முறை திரும்பா திரும்ப அழைத்ததால் , 10 நொடி attend செய்து cut செய்தால் மௌனமாக . முதன் முறையாக ஒரு பெண்ணிற்காக என் கண்களில் நீர். அது அவளுக்காகவே என்று என்னால் உணர்த்த முதியாத சூழ்நிலையில்..
"நான் தேடிய காதலால் நான் பட்ட வலி குறைய , தினமும் சென்றேன் marina கடற்கரைக்கு நண்பர்களோடு இரவு 10 மணி வரை , அவள் நினைப்பை குறைத்து மற்றதை பேசி. வீடு வந்ததும் தனி அறையில் அவள் அனுப்பிய sms களோடு ஒரு மணி நேரம் அவள் நினைப்பு .

சில வாரம் கழித்து, அவள் Numberil இருந்து அழைப்பு, அவளுக்கு சொந்தத்தில் நிச்சயம் என , நான் நிச்சயம் வரகூடாது என. என் காதல் காற்றில் சென்றது confirm ஆனது. இரவு பகல் பாராமல் உயிருக்கு உயிராக பழகிய எனக்கு அவள் வைத்த அழகிய பெயர் "good friend"

2 comments:

  1. nice one da.... really i felt something different.........

    ReplyDelete
  2. really ni rooommmmbaaaa nalavan daaaa

    ReplyDelete